Saturday 26 February 2011

கவி காரை அழகப்பன்

உடையப்பா என்று சொன்னால் புதுக்கோட்டை

ஊரில் (யாரும்)தெரியாதார் ஆளில்லை ; தனக்கொரு

  படையப்பா என்றே இயக்கமதில் பிரிவுப்

படைகளை உருவாக்கி யதில் நீயில்லை  ; காசுக்கொரு

முடையப்பா என்ற போதும் முகம்சுளித்ததில்லை  ; இளமையில்

இளங்கலை பயிலயில் நீ இந்திக்கு வழி விட்டதில்லை ;

உடையப்பா என்றே இந்திமொழிப் பலகைகளை

அழகப்பர் கல்லூரி அருகே ஊக்கமாய் உடைத்தெறிந்தாய்  !

தடையப்பா என்றே எவரும் தருகின்ற இன்னலதை

தடந்தோளு ண்டேன்று தகர்த்தே எறிந்திட்டாய் !

மனையறத்து தலைவி ராமதிலகம் நகர்

மன்றத்து தலைவியனாள்;  பல் சாதனைகள் புரியலானாள்

இணையறத்தே நீவீர் இணைந்து பெற்ற செந்தில்குமார்

இணையற்ற கலைமான் ; இவண் பிடிகின்றான் வலக்கையால்

துணைக்கொரு இனைமான் புவனேஸ்வரி எனும் வலங்கைமான் !

தடைக்கொரு வழியின்றி தாள்மணிக்கதவம் திறக்கட்டும் !

திணைதேன் மகரந்தங்கள் திடமாய் நுகரட்டும் _ விரிந்தே

இல்லறச் சிறகுகள் இதமாய் பறக்கட்டும் - உங்கள்

நல்லறச் சிட்டுக்களும் முழங்கட்டும் நம்கழகத்து கொள்கைகளை !

நாளும் முயற்சி முன்னேற்றம் முதன்மையுடன் வாழி வாழி !பல்லூழி !


 கவி காரை அழகப்பன் திரைபடபாடலசிரியர் எழுதிய கவிதை

ரவிச்சந்திரன்

எட்டாவது அதிசயம்




புதுக்கோட்டை மாவட்டத்தில்  அமைந்திருக்கும் குக்கிராமமான குடிமியான்மலை  வரலாற்று சிறப்புமிக்க ஒரு பகுதியாகும் .உலகின் எட்டாவது அதிசயம் ஒன்றினையும் அங்கு  காணலாம். ஆம் அந்த எட்டாவது அதிசயம் வேறுயாருமல்ல அருமை சகோதரர் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் தான் என்று சொல்லவேண்டும்.மிக சிறிய  வயதில் அறக்கட்டளை ஓன்று நிறுவி அதன் மூலம் மக்களுக்கு பல நல்ல செயற்கரிய உதவிகளை  செய்து கொண்டுஇருக்கிறார் .சுமார் 200 க்கும்  மேற்பட்டவர்களுக்கு தையல் இயந்திரமும் ,பள்ளி செல்லும் மாணவர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட சைக்கிள் களையும் வழங்கி,ஏழை எளிய மாணவர்களுக்கு  கல்வி பயில தேவையான நிதியை அறக்கட்டளை மூலம் வழங்கி மாணவர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.அதே போல் இவர் கணக்கில் அடங்காத இலவச திருமணத்தை நடத்திவைத்து ஏழைகளின் மனதில்  இதய தெய்வமாக வீற்றுக்கிறார்.அதே போல் நோய் வாய் பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற பொருள் உதவி செய்து ,நோயின் பிடியில் இருந்து ஏழை  எளிய மக்களை  விடுவித்து ஏழை களின் காவல் தெய்வமாக இவர் இருப்பது வியப்பான ஒன்றாகும். சாதாரணமாக ஒரு தனி மனிதரிடம் ஏழை மக்களுக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் இருப்பது வியப்பான ஒன்றாகும்.இவர் இதுவரை 100 க்கும் மேற் பட்டோருக்கு இலவசமாக கறவைமாடுகள் வழங்கி ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றி உள்ளார் என்பது மிக சிறப்பான செய்தியாகும் .அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களின் சேவைகளை பற்றி சொல்ல வேண்டுமானால் ,இங்கு  எழுதுவதற்கு பக்கங்கள் போதாது ,அய்யா அவர்களின் சேவைக்கு நெஞ்சார்ந்த நன்றி .

Sunday 20 February 2011

இது எப்புடி இருக்கு?





ஒரு கிராமத்தில் குப்பன் என்ற விறகு வெட்டி வாழ்ந்து வந்தான் .விறகு வெட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தான் .குப்பன் வழக்கம் போல் காட்டிற்கு செல்லும் வழியில் உள்ள குளக்கரையில் தண்ணீர் அருந்துவது அவன் வழக்கம்,அதே போல் இன்றும் குளத்தின் கரையில் நடந்து செல்லும் பொழுது பல்வேறு கற்பனையில் மனதை அலை பாய விட்டு சென்று கொண்டிருந்தான். திடீர் என ஆகாயத்தில் ஏதோ ஒரு பறவை பறப்பது போல் அவனுடைய மனக்கண்ணில் தோன்ற ஆகாயத்தை அண்ணார்ந்து பார்த்தான், அவன் அண்ணார்ந்து பார்த்த நேரத்தில் அவன் கையில் வைத்திருந்த கோடரி தவறி குளத்தில் விழுந்தது.குப்பனுக்கு வாழ்க்கையே சூனியமாகி  போனது போல் ஆயிற்று.குப்பன் கண்ணில் தாரை தரையாக கண்ணீர் கரை புரண்டு ஓடியது .அவனின் அழுகுரல் கேட்டு வன தேவதை  அவன் முன் தோன்றி குப்பா உனக்கு என்ன வேண்டும், என கேட்டது .தேவதையே என்னுடைய கோடரியை  தண்ணீரில் தவற விட்டு விட்டேன்  என்று கூறினான்.அதை கேட்ட தேவதை குளத்தின் உள்ளே சென்று  தங்கத்தால் ஆனா ஒரு கோடரியை வெளியே கொண்டுவந்தது ,இது உன்னுடைய கோடரியா என குப்பனைபார்த்து கேட்டது.இல்லை இது என்னுடைய கோடரி இல்லை என்றான், மீண்டும் வன தேவதை குளத்தின் உள்ளே சென்று வெள்ளியால் செய்யப்பட்ட மற்றொரு கோடரியை கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது அதற்கும்  இது தன்னுடையது இல்லை என்றான் .தேவதை மீண்டும் தண்ணீர் உள்ளே சென்று ஒரு இரும்பு கோடரியை குளத்தின் வெளியே கொண்டு வந்து இது உன்னுடையதா என கேட்டது. ஆம் இது தான் என்னுடைய கோடரி என்றான் குப்பன் .தேவதை அவனுடைய நாணயத்தை போற்றி அவன் கையில் மூன்று கோடரிகளையும் தேவதை கொடுத்து மகிழ்ந்தது. கையில் கிடைத்த தங்க கோடரியை கொண்டு தன்னுடைய வாழ்கையை மாற்றி அமைத்து வாழ ஆரம்பித்தான், ஒரு சில வருடங்களுக்கு பிறகு அதே குளக்கரையில் தன்னுடைய மனைவியுடன் நடந்து வரும்  பொழுது ,அவனுடைய மனைவி குளத்தில் விழுந்துவிட்டாள் குப்பன் வணதேவதையை  நோக்கி பிராத்தனை செய்ய ,தேவதை அவன் கண் முன் தோன்றி உனக்கு என்ன வேண்டும் ஏன் அழுகிறாய் என அவனை 

நோக்கி வினாவியது .குப்பன் தேவதையை நோக்கி தாயே என்னுடைய மனைவி குளத்தில் விழுந்து விட்டாள்,என சொல்ல உடனே தேவதை குளத்தின் உள்ளே சென்று நடிகை நமிதாவை காட்டி குப்பா இது தானே உன்னுடைய மனைவி என கேட்க , குப்பனும் ஆமாம் தாயே இது தான் என்னுடைய மனைவி என்று சொல்ல தேவதை குப்பனை நோக்கி ஏன் குப்பா உன்னுடைய நாணயம் தவறி விட்டது என கேட்டான் .அம்மா நீங்கள் முதலில் நமிதாவை காட்டுவீர்கள் பின்னர் அசினை காட்டுவீர்கள் அதன் பின்னர் என் மனைவியை காட்டுவீர்கள் பிறகு எனது நாணயத்தை போற்றி மூன்று பேரையும் எனக்கு பரிசாக தந்து விடுவீர்கள்  ஒருத்தியை வைத்து குடும்பம் நடத்துவதே கடினமாக உள்ளது ,அதனால் தான் பொய் சொன்னேன் என்றான்.இது எப்புடி இருக்கு