Wednesday 2 March 2011

எவ்வாறு வாழவேண்டும்.


 

ஒரு மனிதன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எவ்வாறு வாழவேண்டும் என தெரிந்து கொள்வோம் .
  ஓர் எட்டில் பயிலாத பழக்கம்
  ஈர் எட்டில் கல்லாத கல்வி
 மூவெட்டில் ஆகாத திருமணம்
  நால் எட்டில் பெறாத குழந்தை
ஐந்தேட்டில் சம்பாதிக்காத    சம்பாத்தியம்
ஆறேட்டில்
செய்யாத செலவு
ஏல் எட்டில் செல்லாத யாத்திரை
எட் ஏட்டில் சாகாத  சாவு

இவை யாவும் பயனற்று போகும்
அதாவது ஒரு மனிதன் தன்னுடைய 8 வயதிற்குள் நல்ல பழக்கங்களை பயின்று இருக்கவேண்டும் .16 வயதிற்குள் கல்வி பயின்று ,24 வயதிற்குள் திருமணத்தை முடித்திருக்க வேண்டும்,32 வயதிற்குள் குழந்தை பெற்றிருக்க  வேண்டும் . நாற்பது வயதிற்குள் சம்பாதித்து ,48 வயதிற்குள் தான் சம்பாதித்த சம்பாத்தியத்தில் தன்னுடைய குடும்பத்திற்கு தேவையான மற்றும் தனக்குள்ள கடமைகளை முடித்திருக்க வேண்டும்.56 வயதில் செல்ல வேண்டிய கோவில் குளங்கள் யாத்திரை இவை யாவையையும் முடித்திருக்க வேண்டும் .அதே போல் 64 வயதிற்கு மேல் இந்த பூமியில் வாழக்கூடாது .மேற்கண்டவைகளை உரிய காலத்தில் முடிக்கவில்லை எனில் இவை யாவும் வீணாகும் . 
(மேற் கண்ட வற்றில் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் )

No comments:

Post a Comment