Wednesday 2 March 2011

பழிக்கு பழி



ஒரு கிராமத்தில் வயதான பாட்டி ஒருத்தி வாழ்ந்துவந்தாள். அந்த பாட்டிக்கு ஒரு மகன் ஒருத்தன் இருந்தான், பாட்டிக்கு வாய்ச்ச மருமகள் சரியான கோபக்காரி, தன்னோட கணவர் இருக்கும் நேரத்தில் மட்டும் மாமியார்கிட்ட அன்பா இருக்கின்ற மாதிரி நடிப்பா,தன்னோட கணவன் வெளியில் சென்றதும் மாமியாருக்கு  சாப்பாடு கொடுக்க மாட்ட. வீட்டின் உள்ளே இருக்காதே என மாமியாரை மாட்டு தொழுவத்தில் தான் படுக்க அனுமதிப்பா,சாப்பாடும் நாயோட தட்டில் தான் . பாட்டி தன்னோட நிலை கண்டு வருந்தி ஒரு முடிவு எடுத்தாள்.மருமகளோட சண்டை போட்டு தன்னோட இந்த நிலையை சரிசெய்ய முடியும் என தீர்மானம் செய்தாள். வழக்கம்போல் கிழவியோட மகன் வீட்டை விட்டு வெளியில் சென்றதும்,மருமகள் கிழவியை மாட்டு தொழுவத்திற்கு போக சொன்னாள்  ஆனால் கிழவி போடி இது என்னோட வீடு நீ வேண்டுமானால் வெளியில் போ என கிழவி மறுக்க .கோப முற்ற மருமகள் வீட்டின் உள்ளே கிடந்த பெரிய உலக்கை யை எடுத்து கிழவியின் தலையில் அடிக்க கிழவி தரையில் சரிந்தாள். மாமியார்  இறந்து விட்டாள் என கிழவியின் மகனுக்கு செய்தி சொல்லி அனுப்ப, மகன் வந்ததும் உடனே கிழவியை,மகனும் மருமகளுமாக சேர்ந்து பக்கத்தில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்து சென்றார்கள் .

கிழவியின் உடம்பின் மேல் விறகுகளை அடுக்கி தீயை மூட்டலாம் என பார்த்தால் ரெண்டுபேருமே தீ பெட்டி எடுத்து வர மறந்து விட்டனர் .உடனே கணவன் நான் போயி தீப்பெட்டி எடுத்து வருகிறேன் நீ இங்கே இரு என மனைவியிடம் சொல்ல ,நான் மட்டும் எப்புடி இங்க தனியாக இருக்க முடியும் நானும் உங்களோட வீட்டுக்கு வரேன்னு சொல்லி அவளும் அவனோட புறப்பட்டாள்.உண்மையில் கிழவி சாகவில்லை கிழவி மயக்கத்தில் இருப்பது யாருக்கும் தெரியாது ,திடீரென கிழவிக்கு சுய நினைவு வர தன் மீது அடுக்கி வைத்திருந்த விறகுகளை தள்ளி கிழவி எழுந்து பார்த்தாள்.தன் இருப்பது சுடுகாடு என  உணர்ந்து அருகில் உள்ள கோவிலை நோக்கி ஓடினால் அங்கே சென்று கோவிலில் உள்ள சிலையின் பின்னே அமர்ந்தாள். வீட்டுக்கு போன மகனும் மருமகளும் தீப்பெட்டி எடுத்து வந்து கிழவி உள்ளே இருப்பதாக எண்ணி நெருப்பை மூட்டினான் . கோவில் உள்ளே இருந்த கிழவி மெதுவாக எழுந்து நிற்க முயல தீடிரென நான்கு திருடர்கள் கோவில் உள்ளே வர கிழவி நிலையை உணர்ந்து சிலையின் பின்னே மறைவாக அமர ,உள்ளே வந்த திருடர்கள் காளி சிலையை நோக்கி அம்மா நாங்கள் கொள்ளை அடித்து வந்த பணத்தை இன்று இரவு இங்கே வைக்கலாமா உத்தரவு தாருங்கள் என கேட்க,சிலையின் பின்னால் அமர்ந்திருந்த கிழவி தன்னோடைய வாயால் ச் ச்ச்   என பல்லியை போல் சத்தமிட திருடர்கள் ஆக சரியான சகுனம் என அவர்கள் கொண்டுவந்த நகையை  கோவில் உள்ளே வைத்தனர், காளியை நோக்கி தாயீ இன்று வடக்கு திசை நோக்கி திருடலாமா   ?  என உத்தரவு கேட்க சிலையின்  பின்னால் அமர்ந்திருந்த கிழவி மீண்டும் பல்லி போல் சத்தமிட,    திருடர்கள் சரியான சகுனம் என்று குறி திருட சென்று விட்டனர் .சிலைக்கு பின்னால் அமர்ந்திருந்த கிழவி இதுதான் சமயம் என்று திருடர்களிடம் இருந்த நகைகளை அபேஸ் செய்து கொண்டு தனது இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.கிழவி தன்னுடைய வீட்டிற்கு அதிகாலை நேரம் சென்று அடைந்தாள் . வீட்டின் கதவு தட்டும் ஓசை கேட்டு மருமகள் கதவை திறக்க கிழவியை பார்த்ததும் மயங்கி கீழே  விழுந்தாள்.அவள் போட்ட சத்தத்தில் கிழவியின் மகன்  படுக்கையை விட்டு எழுந்தான். கிழவி உயிருடன் இருப்பதை கண்ட மகன் அம்மா எப்புடிம்மா உயிருடன் வந்தாய் ,என கேட்க , கிழவி ,மகனே நீ என்னை எரித்தவுடன் மேலோகம் சென்றேன் , அங்கு என்னுடைய அம்மா அப்பா ,எனக்கு தேவையான நகைகளையும் பணத்தையும் கொடுத்து என்னை திருப்பி அனுப்பினர் ,இதோ பார் நகை ,மற்றும் பணம் என தான் கொள்ளையரிடம் கொண்டு வந்த தங்கத்தை மகனிடம் காட்ட ,கிழவி சொன்னதை கேட்ட மருமகளுக்கு ஒரு யோசனை தோன்றியது , உடனே தன் கணவனை நோக்கி நாளை என்னை கொண்டு போயி சுடுகாட்டில் வைத்து  எரித்து விடுங்கள் ,நானும் என் அம்மா அப்பா விடம் நகை மற்றும் பணம் வங்கி வருகிறேன் என்று தன் கணவனிடம் சொல்ல ,அவனும் அதை ஏற்று அவளை சுடுகாட்டிற்கு அழைத்து செல்ல கிழவியும் உடன் சென்றாள் .  மருமகளை படுக்க வைத்து அவள் மேல் கட்டை களை அடுக்கி தன் மகனிடம் தான் மறக்காமல் கொண்டு வந்த தீ பெட்டியை கொடுத்தாள்.மகனும் தன் மனைவி மேல் நெருப்பை மூட்டினான்  .கிழவி சாமர்த்தியமாக தன்னை மதிக்காத மருமகளை தானே முன்வந்து சாகும்படி செய்து விட்டாள் .

No comments:

Post a Comment