Wednesday 2 March 2011

பழ மொழியின் விளக்கம்

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடி போலாமா,இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு ஓடி போலாமா !நம்ம வாழ்ந்துகிட்டு இருக்கிற காலம் இப்புடித்தான் இருக்கு. ஆனா பண்டைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் திருமணம் என்றால்,புரோக்கர் உதவியோடதான் செய்வாங்க.காரைக்குடியில் வசிக்கிற வள்ளியம்மை ஆச்சி தன்னோட மகனுக்கு ஒரு வரன் வேணும் என்று சொல்ல, புரோக்கர் ஆச்சியை பார்த்து பையன்னோட விவரம் சொல்லுங்க,அப்புறம் உங்களுடைய  மகனுக்கு பார்க்கிற பொண்ணு  எப்புடி இருக்கனும் சொல்லுங்க ஆச்சி.என்றார் தரகர். அதுக்கு ஆச்சி என்ன சொன்னாக
தெரியுமா. படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க. தரகருக்கு தலை சுத்திருச்சு.என்னடா இது ஆச்சி என்ன சொல்லுறாங்கன்னு ஒன்னும் புரியாம தரகர்,ஆச்சி உங்க பையன பத்தி சொல்லுங்க,
ஏன்னா பொண்ணு வீட்டுல விவரம் சொல்லணும்,என்று சொன்ன தரகருக்கு ஆச்சி
சொன்ன பதில் என்ன தெரியுமா.யோவ் தரகரே உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எந்திருக்க மாட்டான் என்னோட பையன்.அவனுக்குதான் படுத்தா  பாயை விட்டு எழுந்திருக்காத மருமகள் வேணும் என்று சொன்னங்க.தரகர் குழம்பி
போயி ஆச்சியும் வேணாம் அவுங்களோட சவகசமும் வேணாம் சாமீன்னு ஒரே
ஓட்டமா ஓடிப்போனவர் எங்க நின்னாருன்னு பார்த்த அந்த ஊரில் உள்ள ஒருசாமியாரோட குடில் வாசல் வந்துதான் நின்றார்.  தரகர் சொன்ன தகவலை  கேட்ட சாமியார் அதனுடைய விவரத்தை சொன்னார்.
தலை தெறிச்சு வந்த தரகரை பார்த்து சாமியார் சொன்ன பதில்.கல்யாணம் பண்ணி
கூட்டி  கிட்டு வருகின்ற மருமகள் நைட் பாயை விறுச்சு படுத்த பின்னர் ,மாமியார் ஏம்மா மத்தியானம்
மாடியில் காய போட்ட வடகத்தை எடுத்தாச்சா ?, அத்தை எல்லாம் அப்பவே எடுத்தாச்சு
அத்தை. ஏம்மா மீதம் உள்ள பாலை உரை ஊத்தியாட்சா?  அப்பவே ஊதியாச்சு அத்தை.
ஆமா மாடி மேல  துணி காய போட்டியே எடுத்தாட்சா  ?  எடுத்தாச்சு அத்தை . இப்புடி மாமியார் கேட்கின்ற கேள்விக்கு படுத்த பாயை விட்டு எழாமல் பதில் சொல்லும் சமத்தான மருமகள் தான் தனக்கு வேணும்முன்னு ஆச்சி சொல்லி இருக்காங்க.
தரகர் தன்னோட இன்னொரு குழப்பத்தையும் சொல்லி அதற்கும் விளக்கம் கேட்டார் . தன்னோட மகனை பத்தி சொல்லும் பொழுது உட்கார்ந்தா உட்கார்ந்த இடத்தை விட்டு எளுந்திருக்கமாட்டன் அப்புடீன்னு சொன்னகளே அதுக்கு என்ன
அர்த்தம் சாமியாரே ?அதாவது உயர் பதவியில் உள்ளவங்க யாருக்ககாகவும்  
எழுந்து நின்னு பதில் சொல்ல தேவை இல்லை, தன்னோட மகன் பெரிய வேலையில் இருக்கிறதா ஆச்சி சொல்லி இருக்காங்க.இது எப்புடி இருக்கு ?

No comments:

Post a Comment