Thursday 10 March 2011

நினைத்தாலே நெஞ்சு பதறும் மர்மம்


                                                     இதயம் பலகீனம் உள்ளவர்கள்  இந்த கதையை படிக்க வேண்டாம். அதே போல் கர்ப்பிணிகள் இந்த தொடரை படிக்க வேண்டாம். இது யாரைப் பற்றியும் குறிப்பிடும் தொடர் இல்லை . மேலும் இது முழுக்க முழுக்க  கற்பனையே .(உண்மையா ?)

காலை நேரம் கூவும்  சேவலின் சத்தம் மூர்த்தியின் காதுகளை கிழிக்க மெதுவாக படுக்கையை விட்டு எழுந்து தன் முன்னே உள்ள சாமி படத்தில்  விழித்தான் . பாவம் இன்றைய பொழுது அவனுக்கு நல்ல பொழுதாக இருக்காது என அவனுக்கு தெரியாது. அவனுடைய வாழ்க்கையில் துயரம்   அவனை சந்திக்க போகிறது என தெரியாமல் வழக்கம் போல் தன்னுடைய ஆட்டோவை துடைத்து காலைகடன்களை முடித்து
 சவாரிக்கு தயார் ஆனான் . வண்டியை ஸ்டார்ட் செய்து இறைவனை வேண்டி முதல் கேயரை போட்டு வண்டியை நகர்த்தினான் .அவனுக்காகவே  காத்திருந்தது போல்கருப்பு  நிற பூனை அவனது ஆட்டோ வின் குறுக்கே சென்றது. 

                                                                                                                 ஆட்டோ ஆட்டோ stand ல்  போய்நின்றது .மூர்த்தி  காகவே  காத்திருந்தது போல் உயரமான இரண்டு பேர் வந்து  தம்பி  காவல் நிலையம் வரை சவாரி போகலாமா என கேட்க. உக்காருங்க உள்ளே, என கூறி வண்டி காவல்நிலையம் நோக்கி சென்றது. காவல் நிலையத்தில் இறங்கிய இரண்டு பெரும்    மூர்த்தி ன் கைகளை இருக பற்றி, டே ! உள்ள வாடா, என இழுக்க, மூர்த்தி தடுமாறிபோனான். காவல் நிலையம் உள்ளே சென்றதும் சவாரி வந்த இருவரும் தங்களுடைய ID card ஐ உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் வசம் காட்ட அவர்களும் காவல் துறை சேர்ந்தவர்கள் தான் என முடிவு  செய்தான் மூர்த்தி.ஆனால் தன்னை ஏன் அழைத்து வந்தார்கள் என குழம்பி நின்றான். பேப்பர் பேனாவோடு வந்த இன்ஸ்பெக்டர் டே! ஒழுங்கா உண்மையை சொல்லு , அந்த  பொண்ண கடத்தி  என்ன செய்தாய், அந்த  பொண்ணு உயிரோட இருக்கா ? இல்லை 
கொன்னுட்டியா?

        மூர்த்தி இன்ஸ்பெக்டர் ஐ நோக்கி, சார், என்ன கேட்குரிங்கன்னு எனக்கு ஒன்னும் புரியலை.
பளார்னு ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது.மூர்த்திக்கு பொறி கலங்கியது  போல் இருந்தது .

டே! உன்னைபோல் எத்தனை பேரை பாத்திருப்பேன், டே! போன வருஷம்
 உன்னோட வீட்டுக்கு வந்த லலிதான்கிற  பொண்ணு அவளோட வீடு போய்
சேரலை. உண்மைய சொல்லு. பொண்ணு எங்கடா? மீண்டும் ஒரு அரை அவன் முகத்தில் விழுந்தது .

           சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது நீங்க சொன்ன மாதிரி போன வருடம் ஒரு நாள் மதிய சாப்பாடு சாப்பிட வீட்டுக்கு  போன போது ,எங்க வீட்டுல ஒரு பொண்ணு சாப்பிட்டுகிட்டு இருந்துச்சு. நான் அம்மாகிட்ட ஏம்மா, இது யாருன்னு கேட்டப்ப, பாவம் இந்தபொண்ணு.  avalai avunga    வீட்டுல ரொம்ப கொடுமை படுத்துறாங்களாம். அதாவது இந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம்,வீட்டு  வேலை பாக்குறேன், எங்கையாவது சேர்த்து விடுங்கன்னு சொன்னுச்சு. யாரும்மா கூட்டிகிட்டு  வந்தாங்கன்னு அம்மா கிட்ட கேட்டேன். அம்மா சொன்னங்க, வாசல்கிட்ட நின்னு இந்த பொண்ணு அழுதுகிட்டு நின்னுச்சு, அப்போ உங்க அண்ணன் தான் உள்ள கூட்டிகிட்டு வந்துசாப்பாடு கொடுக்க சொன்னான். சாப்பிட்டதும்  பக்கத்து 
வீட்டுக்கு, வீட்டு  வேலைக்கு,  ஆள்  வேணுமுன்னு சொன்னங்க. அங்க கொண்டு  போய் விட்டுருவேன்.  நீ சாப்பிட்டு கிளம்புடா  அப்புடின்னு அம்மா சொன்னாங்க .


போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு பேர் தனியாக சென்று ஏதோ பேச,     

டே! இங்க வா என மூர்த்தி யை  அழைத்து, நான் சொல்லுற மாதிரி எழுது, சார் சொல்லுங்க, நான் பத்து நாட்களுக்குள் லலிதா என்ற பெண்ணை கொண்டு வந்து  ஸ்டேஷன் நில்   ஒப்படைக்கிறேன். 

அய்யா, அந்த பொண்ணு எங்க இருக்குன்னு எனக்கு தெரியாது.
அப்புடி இல்லைன்ன, யோவ் ஏட்டு,

இவன் ஆட்டோவை சீஸ் பண்ணி உள்ள வையா. 

மூர்த்தி அரண்டுபோனான். 

சார் நீங்க சொல்லுறபடி எழுதி தரேன். 

அதே போல அடுத்த வாரம் விசாரணைக்கு எங்க ஊர்  sp calculator கனகாம்பரம்
அய்யாவ ஆபீஸ்ல வந்து சந்திக்கணும் .

மூர்த்தி மனது படபடத்தது ,ஸ்டேஷன் ஐ விட்டு மூர்த்தி புறபட்டான் ,அவனின் மனது காலையில்
 அவன் ஆட்டோவை   கிராஸ் செய்த பூனை தான் அவன் கண் முன்னே தோன்றியது
மூர்த்திபோலீஸ் ஸ்டேஷன் இல் இருந்து புறப்பட்ட, தனக்கு  வேண்டியவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி புலம்பினான் .காவலர்கள் சொன்ன தேதியில், தான்  விசாரணைக்கு செல்ல lawer  ஐ சந்தித்தான்  .ஒன்னும் கவலை படவேண்டாம் தம்பி நான் பாத்துகிறேன் ,குறிப்பிட்ட தேதியில் அந்த ஊர் sp யை பாப்போம் .நீங்க அதற்க்கு வேண்டிய ஏற்பாடை செய், கொலை செய்ற கொலைகராங்கலையே நான் காப்பத்துவேன் ஒன்னும் பயப்பட வேண்டாம் புறபடு. 



நல்ல பக்க பலத்தோடு, குறிப்பிட்ட ஊர் நோக்கி, குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை சந்திக்க சென்ற அனைவருக்கும் ஏமாற்றம் தான்
மிஞ்சியது. காரணம் அன்று அந்த அதிகாரி சென்னை ஹை கோர்ட்   சென்றிருந்தார்.


என்னடா இன்னும் எழரை     ஆரம்பம் ஆகலைன்னு படிக்கிற வாசகர்கள் கேட்கலாம்
 




இரண்டுநாள் கழித்து குறிப்பிட்ட அதிகாரிய சந்திக்க முடிவெடுத்தாங்க.அன்றைக்கு இரவு மணி எட்டு இருக்கும். நண்பர்கள் எல்லாம் வரகூடிய இடத்தில் மூர்த்தி காத்திருந்தான் .


ஆனா அவனோட மனசு ஏனோ திக் திக் என்று அடித்தது .ராஜனும் ,பீட்டர்  ரும் வழக்கமா வரவேண்டிய அந்த புதிதாய் கட்டி கொண்டு இருக்கும் கட்டிடம் முன்னால் குமிக்கப்பட்டிருக்கும் மணலில் படுத்திருந்த மூர்த்தி யிடம் ,டே என்னடா, ஆள் ஒரு மாதிரியா படுத்திருக்க .
ஒன்னும் இல்லை நண்பா. எங்க அம்மா படிக்காதவங்க. அது போன வருஷம் செஞ்ச ஒரு முட்டாள் தனத்தாள் என்னைய போலீஸ் விசாரணைக்கு வர சொல்லுது .

நண்பா பீட்டர் எனக்கு ஒரு உதவி செய்வியா? சொல்லு மூர்த்தி. என்ன செய்யணும். உண்மைய சொல்லு, என்ன உதவி வேண்டுமானாலும்  செய்யுறேன்  .

நாளைக்கு காலைல காஞ்சிபுரம் போய் sp  யை பார்த்து விசாரணையை முடிக்கணும் எதாவது வண்டி ஏற்பாடு செய் .

மூர்தியை பார்த்து ராஜன் கேட்டான். டே அப்பா! என்ன விசாரணை ஏன் உன்னோட கண்ணு கலங்குது, நீ எதுவும் தப்பு செய்யலை இல்ல .
இல்லைடா. எங்க அம்மா பசின்னு வந்த ஒரு பொண்ணுக்கு சாப்பாடு போட்ட ஒரே குற்றத்துக்காக  அந்த பொன்னை நான் 
கடத்தி வித்துட்டதா போலீஸ் மிரட்டுறாங்க .என சொல்லி ஓவென அழுதான் 
ஒன்னும் பயப்படாதே நாங்களும் உன்னோட நாளை காலை விசாரணைக்கு 
வரோம். எனக்கு வேண்டியவர் டாட்டா சுமோ வாடகைக்கு விடுறார் .நாளைக்கு 
எல்லோரும் காஞ்சிபுரம் நோக்கி போவோம் என்றான் பீட்டர்.

அதிகாலை  எழுந்து மூர்த்தி மற்றும் அவனது தந்தை மற்றும் அவனது அண்ணன் எல்லோரும் குளித்து காலை  உணவைமுடித்து ரெடியாக 
இருந்தார்கள் .டாட்டா சுமோ ராஜன் விட்டின் முன்னே 
எழரை மணிக்கு நின்றது .மூர்த்தி கல்லூரியில் இளங்கலை பயின்றவன் .காலத்தின் சூழ்நிலை வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலை இவ்வாறாக மனதில் நினைத்தபடி சுமோ வின் உள்ளே ஏறி அமர்ந்தான் ராஜன். வண்டியில் ஏற்கனவே பீட்டர் அமர்ந்திருந்தான் .என்ன பீட்டர் வண்டி எங்க போகணும் டீஸல் போட்டியா இல்லையா?


பீட்டர் பதில் சொல்லும் முன்னே டிரைவர் முந்தி கொண்டு  டீஸல் ஏற்கனவே போட்டாச்சு ,இப்ப எங்க போகணும் சொல்லுங்க என்றான் . பாவம் அந்த டிரைவர் ரொம்ப அவசரமாகவும் ஆர்வமாகவும் இருக்கான் ,அவனுக்கு தெரியாது இந்த சவாரி அவன் வாழ்க்கையை ரொம்ப பாதிக்கும் என்று .


பாவம்! வண்டி சவாரி போனதும் சாயந்தரம் வந்திடும் என நம்பி, அடுத்தசவாரிக்கு பேசிகிட்டு இருந்தார் அந்த வண்டியோட உரிமையாளர் .

வண்டி புறப்படும் போதே வண்டியின் குறுக்கே பன்றி வேக மாக ஓடியது. 

 வண்டிமூர்த்தி வீட்டை அடைந்ததும் ,வண்டியில்மூர்த்தி அப்பா ,அண்ணன் மூர்த்தி யோட தங்கச்சி வீட்டுக்காரர், பக்கத்துக்கு வீட்டுகாரர் எல்லோரும் 
வண்டியில் அமர வண்டி travellers பங்களா முன் செல்லும் போது எதிரில்
 மூர்த்தியைஇன்று விசாரணைக்கு வர சொன்ன  போலீஸ் காரர் ஒருத்தருடன் மேலும் இரண்டுபேர் நிற்க, வண்டிய நிப்பாட்டு ,என மூர்த்தி சொல்ல வண்டி ஓரங்கட்டப்பட்டது .
மூர்த்தி வண்டிய விட்டு இரங்கி காஞ்சிபுரம் போலீஸ் காரரை அழைக்க மூர்த்தியை பார்த்ததும் ,அந்த காவலர் அவருடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தாண்டவனிடம் ஏதோ காதில் சொல்ல .சார் நாம யாரை அர்ரெஸ்ட் பண்ண வந்தோமோ அந்த 
குற்றவாளி  இவன்தான் என்று முனுமுனுக்க ,மூர்த்தி அருகில் வந்த இன்ஸ்பெக்டர் தம்பி, சார் தான் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ,அப்புறம் நான்தான் SI தாண்டவன். தம்பி,என்ன வண்டியெல்லாம் எடுத்துகிட்டு 
எங்க போறிங்க  என கேட்க, .சார் இன்னைக்கு விசாரணைக்கு வர சொன்னங்க. அதான் வண்டி எடுத்துக்கிட்டு புறப்படுகிறோம் .தம்பி, வண்டியில் தேவை இல்லாத ஆட்களை இறகிடுங்க என்று இன்ஸ்பெக்டர் குற,  அய்யா எங்க வீட்டுக்கு வண்டிய விடுறோம் .எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில்தான் அந்த பொண்ணு ஒரு நாள் தங்கி இருந்தது. தயவு செய்து அங்க வந்து விசாரணை செய்யவும்


கடவுளே என்ன  நடக்கப்போகுது
 தொடரும்

No comments:

Post a Comment